சுடச்சுட

  

  கடலூரில் ஆளுநர் ஆய்வு நடத்தக் கூடாதென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 14th December 2017 01:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆய்வு செய்யக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வியாழக்கிழமை (டிச. 14) விருத்தாசலத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறார். இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்வார் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.
  இதுதொடர்பாக கடலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் டி.ஆறுமுகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்கெனவே கோவை, திருநெல்வேலி, குமரி மவாட்டங்களுக்குச் சென்று மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்துள்ளார். 
  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பணிகளை அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வு செய்வதுதான் வழக்கம். மத்திய அரசால் நியமனம் செய்யப்படும் ஆளுநர் தேவையற்ற முறையில் நடைமுறையில் இல்லாத அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆய்வு செய்யும் நடைமுறை ஏற்கக் கூடியதல்ல.
  எனவே, ஆளுநரின் எல்லை மீறிய நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். கடலூர் மாவட்டத்தில் ஆய்வுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai