சுடச்சுட

    

    கோரிக்கைகளை வலியுறுத்தி டிச. 22-இல் வேலைநிறுத்தம்: என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் அறிவிப்பு

    By DIN  |   Published on : 14th December 2017 01:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி,  வருகிற 22-ஆம் தேதி  அடையாள வேலைநிறுத்தம் செய்யப்படும் என என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
    நெய்வேலி, என்எல்சி இந்தியா நிறுவனத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
    இந்த நிலையில், என்எல்சி இண்கோசர்வ், ஹவுசிகோஸ், ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பு ஆகியவை சார்பில், வேலைநிறுத்த ஆயத்த பேரணி மற்றும் பொதுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    புதுக்குப்பம் ரவுண்டானாஅம்பேத்கர் சிலையில் இருந்து புறப்பட்ட பேரணிக்கு சிஐடியு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலர் சக்கரபாணி தலைமை வகித்தார். பேரணியை தொமுச  தலைவர் வீர.ராமச்சந்திரன் தொடக்கிவைத்தார். 
    மத்திய பேருந்து நிலையம் அருகே பேரணி முடிந்ததும், அங்கு கோரிக்கை விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.  சிஐடியூ ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத் தலைவர் மாதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். தொமுச ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் செயலர் பழனிவேல், பாட்டாளி ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் செயலர் முருகவேல், தொழிலாளர் வாழ்வுரிமைச் சங்கச் செயலர் திருநாவுக்கரசு, எல்எல்எப் சங்கத் தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
    சிஐடியூ மாநிலத் துணைச் செயலர் வி.குமார், சிஐடியூ பொதுச் செயலர் டி.ஜெயராமன், அண்ணா தொழிலாளர் ஊழியர்கள் சங்கத்தின் செயலர் ரா. உதயகுமார்,  தொமுச சி.சுகுமார், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டத் தலைவர் முருகன் ஆகியோர் பேசினர்.
    பின்னர், சிஐடியு ஒப்பந்தத் தொழிலாளர் சங்க அலுவலகச் செயலர் அமிர்தலிங்கம் கூறியதாவது:  டிச. 21-ஆம் தேதிக்குள் ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை என்எல்சி இந்தியா நிர்வாகம்  நிறைவேற்ற வேண்டும்.  
    இல்லையென்றால் 22-ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்யப்படும். 30-ஆம் தேதிக்குள் கோரிக்கைகளை நிர்வாகம் நிறைவேற்றித் தர தவறினால், ஜனவரி முதல் வாரத்தில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தார். 
    கூட்டத்தில் ஒப்பந்தத் தொழிலாளர் தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தொமுச ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் பொருளாளர் ஸ்டாலின் நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai