சுடச்சுட

    

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே  சிஐடியு தொழிற்சங்கத்தினர் புதன்கிழமை பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில்  
    ஈடுபட்டனர். 
    பொது விநியோகத் திட்டத்தின் கீழ், வழங்கப்பட்டு வந்த அத்தியாவசியப் பொருள்களின் மானியத்தை மத்திய - மாநில அரசுகள் குறைந்துள்ளன. இதனால், நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொருள்களின் விலை உயர்ந்துள்ளதோடு,  பல்வேறு பொருள்களின் விற்பனையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால்,  ஏழை - எளிய மக்கள் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். 
    இவ்வாறு மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபட்டு வரும் மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்து, கடலூர் மாவட்ட சிஐடியு சார்பில், கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே புதன்கிழமை பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட சிஐடியு தலைவர் ஜி.பாஸ்கரன் தலைமை வகித்தார். செயலர் பி.கருப்பையன் சிறப்புரையாற்றினார். மாநிலக் குழு உறுப்பினர் ஏ.வேல்முருகன், மாவட்டத் துணைத் தலைவர்கள் ஆர்.ஆளவந்தார், கே.சாவித்திரி, வி.வைத்தியலிங்கம், இணைச் செயலர்கள் ஏ.பாபு, டி.ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai