சுடச்சுட

    

    ஒக்கி புயலில் சிக்கி காணாமல் போன மீனவர்களை உடனடியாகத் தேடி மீட்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்கள் அதிகாரம் அமைப்பினர் கடலூரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
    ஆர்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் நிர்வாகி எம்.ராமலிங்கம் தலைமை வகித்தார். அனைத்துப் பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சி.குமார், வழக்குரைஞர் சி.ஏ.தாஸ், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பின் மாநில இணைப் பொதுச் செயலர் கோ.வெங்கடேசன், தமிழ்நாடு மீனவர் பேரவையின் மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளான நடேசன், பரிதிவாணன், கே.ரவி, கார்த்திகேயன், செந்தில்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் பாலு சிறப்புரையாற்றினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai