சுடச்சுட

    

    மாவட்டத்தில் 43 கோயில்களில் திருப்பணி: ஆட்சியர் தகவல்

    By DIN  |   Published on : 14th December 2017 01:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் மாவட்டத்தில் 43 கோயில்களில் திருப்பணி நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்தார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  கடலூர் மாவட்டத்தில் கடந்த 2011 -ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரையில் 272 கோயில்களில் திருப்பணி முடிக்கப்பட்டு குடமுழக்கு நடைபெற்றுள்ளது. கோயில் அன்னதானத் திட்டத்தின் கீழ், 20 கோயில்களில் நாள்தோறும் 1,150 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. 
    ஆதிதிராவிடர்,  பழங்குடியினர் வாழும் பகுதிகளில் அமைந்துள்ள கோயில்கள் புனரமைப்பு நிதியுதவித் திட்டத்தின் கீழ்,  2011- ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரையில் ரூ. 59.50 லட்சத்தில் 119 கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன. தற்போது 2016 - 2017-ஆம் நிதியாண்டில் ரூ. 18 லட்சம் செலவில் 18 கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 
    கிராமப்புறப் பகுதிகளில் அமைந்துள்ள கோயில்கள் புனரமைப்பு நிதியுதவித் திட்டத்தின் கீழ்,  ரூ. 53.50 லட்சத்தில் 107 கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன. தற்போது 2016-17 ஆம் நிதியாண்டில் ரூ. 25 லட்சத்தில் 25 கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
    மாவட்டத்தில் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ், ஒவ்வோர் கோயிலுக்கும் அரசு பங்களிப்பு ரூ. 90 ஆயிரமும், பொதுமக்கள் பங்களிப்பாக ரூ. 10 ஆயிரமுமாக மொத்தம் ரூ. ஒரு லட்சம் முதலீடு செய்யப்பட்டு, அதில் பெறப்படும் வட்டியைக் கொண்டு 447 கோயில்களில் ஒருகால பூஜை திட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 
    கிராமக் கோயில் பூசாரிகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், 120 பூசாரிகள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.
    நிதிவசதி இல்லாத பழைமையான சிலைகள் அமைந்துள்ள 103 கோயில்களுக்கு களவு எச்சரிக்கை மணி பொருத்தப்பட்டுள்ளதோடு, மேலும்,  70 கோயில்களுக்கு களவு எச்சரிக்கை மணி பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    சிறு கோயில்களிலும் நாள்தோறும் பூஜை நடைபெறும் பொருட்டு,  800 கோயில்களுக்கு பூஜை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்தார்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai