Enable Javscript for better performance
மின் மாற்றியில் வயர் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    கடலூர் அருகே மின் மாற்றியில் வயர் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
    கடலூர் அருகே உள்ள அரிசிபெரியான்குப்பத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் மாற்றியை கடலூர் மின்சார வாரியத்தின் இள மின் பொறியாளர் பு.தருமன் அண்மையில் ஆய்வு செய்தார். 
    அப்போது, மின் மாற்றியிலுள்ள சுமார் 60 கிலோ காப்பர் கம்பிகள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.  இதுகுறித்து இள மின் பொறியாளர் தருமன் திருப்பாதிரிபுலியூர் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் அளித்தார். அதன் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai