சுடச்சுட

  

  வெலிங்டன் நீர்த்தேக்கக் கரையை முழுமையாகச் சீரமைக்க வேண்டும்: விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 14th December 2017 01:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வெலிங்கடன் நீர்த் தேக்கத்தின் ஏரிக் கரையை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
  திட்டக்குடியை அருகே கீழ்ச்செருவாயில் உள்ள வெலிங்டன் ஏரிக் கரையின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சாலையில் அண்மையில் விரிசல் விழுந்தது. தொடர்ந்து, நீர்த் தேக்கத்தின் உள்பகுதி கரையிலும் மண் சரிவு ஏற்பட்டது. வல்லுநர் குழுவுடன் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே நீர்த் தேக்கத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
  இந்த நிலையில், பல்வேறு விவசாயிகள் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் திட்டக்குடியில் புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தனபால், நல்லூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் அரங்க.இலக்குமணன், துணைத் தலைவர் தொளார் சபாபதி, பெண்ணாடம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சிவ.தியாகராஜன், மானாவாரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ்.விஜயக்குமார், வெலிங்டன் நீர்த் தேக்கச் சிறு - குறு விவசாயிகள் சங்கத் தலைவர் தயா.பேரின்பன், விவசாயிகள் சங்கத் தலைவர் கார்மாங்குடி வெங்கடேசன், உழவர் மன்றத் தலைவர் பூ.பரமசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
  பின்னர், விவசாயிகள் அனைவரும் வெலிங்டன் நீர்த் தேக்கத்தை பார்வையிட்டனர். அப்போது விவசாயிகள் சங்கத்தினர் கூறியதாவது: 
  வெலிங்டன் நீர்த்தேக்கக் கரையைப் பலப்படுத்த ஏற்கனவே ரூ. 20 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்தும் நிபுணர் குழுவின் பரிந்துரையை முழுமையாகச் செயல்படுத்தவில்லை. அதைத் தொடர்ந்து, ஒதுக்கப்பட்ட ரூ. 6 .47  கோடியில் பணிகள் நடந்தும் கரை மேலும் உள்வாங்கப்பட்டு, விரிசல் ஏற்பட்டுள்ளது. அரசு உரிய ஆய்வு செய்து போர்கால நடவடிக்கையாக கரையைச் சீரமைக்க வேண்டும் என்றனர்.
  முன்னோடி விவசாயிகள் கோழியூர் சேதுராமன், செங்கமேடு நாராயணசாமி, சிறுமுளை ராகுல் காந்தி, திட்டக்குடி நடராஜன்பிள்ளை, சாந்தநத்தம் சிவக்குமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன் பின்னர், பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தனர். 

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai