Enable Javscript for better performance
ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு: கடலூரில் இன்று திமுக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு: கடலூரில் இன்று திமுக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 15th December 2017 08:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூரில் ஆய்வு மேற்கொள்ள வரும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில்  கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்  அறிவிக்கப்பட்டுள்ளது.
    இது தொடர்பாக கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
    மாநில சுயாட்சி கொள்கைக்கு விரோதமாகவும்  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்யவும் விதமாகவும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்  கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஆய்வு நடத்தினார்.
    இதனை மு.க.ஸ்டாலின் கண்டித்ததுடன், இனியும் ஆளுநர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டால் திமுக சார்பில் அறவழிப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தார். 
    இந்நிலையில்,  கடலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (டிச.15) ஆளுநர்  ஆய்வு மேற்கொள்ள உள்ளார். ஆளுநரின் ஆய்வைக் கண்டிக்கும் விதமாக கடலூர் மாவட்ட திமுக சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
    மாநில சுயாட்சிக் கொள்கையை நிலைநாட்டவும் ஆளுநரின் அத்துமீறிய அதிகார வேட்கைக்கு கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையிலும், அறவழியிலான கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai