சுடச்சுட

  

  கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே கிள்ளைக் கடலில் மிதந்து வந்த புத்தர் சிலையுடன் கூடிய அழகிய தெப்பக் குடிலை மீனவர்கள் கரைக்குக் கொண்டு வந்தனர்.
  கிள்ளை அருகே உள்ள எம்.ஜி.ஆர். திட்டு மீனவர்கள் புதன்கிழமை மாலை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 15 அடி உயர கம்பத்தில் பல வண்ணக் கொடிகள் பறப்பதைப் பார்த்து அங்கு சென்றனர். அங்கு 10 அடி அகலம், 10 அடி நீளத்தில் மூங்கிலால் செய்யப்பட்ட தெப்பக்குடில் மிதந்து வந்தது தெரிய வந்தது. அதில் 41 வர்ணம் தீட்டப்பட்ட கலசங்கள், இரு பூஜை தட்டுகள், பூஜை பொருள்கள் உள்ளிட்டவை இருந்தன.
  தெப்பத்தின் நடுவில் ஒன்றரை அடி உயரமுள்ள வெண்கலத்தால் ஆன புத்தர் சிலை இருந்தது. அந்தச் சிலையில் ஒரு கையில் கலசமும், மறு கை மூடிய நிலையிலும் இருந்தது.
  பின்னர், மீனவர்கள் தெப்பத்தைத் தங்களது படகில் கட்டி கரைக்குக் கொண்டு வந்து நிறுத்தினர்.
  கடலில் மிதந்து வந்த புத்தர் சிலை பற்றிய செய்தி பரவியதும் கிள்ளையைச் சுற்றியுள்ள கிராம மக்கள் வியப்புடன் வந்து தெப்பக் குடிலையும், புத்தர் சிலையையும் பார்த்துச் சென்றனர்.
  தகவலறிந்த சிதம்பரம் வட்டாட்சியர் மகேஷ்,  வருவாய் ஆய்வாளர் சங்கரன் உள்ளிட்டோர் சென்று பார்வையிட்டு, கடலோரக் காவல் படை மற்றும் உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai