சுடச்சுட

    

    கல்லூரிக்கு பேருந்து வசதி கோரி மாணவர்கள் சாலை மறியல்

    By DIN  |   Published on : 15th December 2017 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கல்லூரிக்குச் செல்ல பேருந்து வசதி கோரி,  காட்டுமன்னார்கோவிலில் மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலை அடுத்துள்ளது முட்டம் கிராமம். இந்தக் கிராமத்தில் கடந்த 2009 -ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கடலூர் -  நாகை மாவட்டங்களை இணைப்பதற்குக் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கடந்த 2011- ஆம் ஆண்டு போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டது. 
    இதனைத் தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்களும் கல்லூரி மாணவர்களும் நாகை மாவட்டம் மணல்மேடு வழியாக மயிலாடுதுறை பகுதிக்குச் சென்று வந்தனர்.  இந்த நிலையில், கடந்த 2016- ஆம் ஆண்டு  நாகை மாவட்டம், மணல்மேடு பகுதியில் அரசுக் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரிக்கு கடலூர் மாவட்டத்திலிருந்து 50 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் செல்கின்றனர். மேலும், மணல்மேடு அருகே உள்ள பாப்பாக்குடி உள்ளிட்ட சில கிராமங்களிலிருந்தும் மாணவர்கள் சென்று வருகின்றனர்.
    மாணவர்கள் சென்று வர வசதியாக நாகை மாவட்டம், மயிலாடுதுறையிலிருந்தும்,  கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலிலிருந்தும் குறிப்பிட்ட நேரத்தில் கல்லூரிச் செல்வதற்கு பேருந்துகள் இயக்கப்படவில்லையாம். 
    இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் வியாழக்கிழமை முட்டம் பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    தகவலறிந்து அங்கு வந்த காட்டுமன்னார்கோவில் போலீஸார் மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம்  நாகை மாவட்டப் பகுதியில் மறியல் செய்யுங்கள், பேருந்தை மயிலாடுதுறை போக்குவரத்துக் கழகப் பணிமனையிலிருந்துதான் இயக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். இதனால், மாணவர்கள் கலைந்து சென்றனர். இந்தச் சாலை மறியலால் சுமார் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai