சுடச்சுட

  

  ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் வேலைநிறுத்த நோட்டீஸ் நிராகரிப்பு

  By DIN  |   Published on : 15th December 2017 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  என்எல்சி இந்தியா நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி,  என்எல்சி ஜீவா -ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்தினர் (ஏஐடியுசி) அளித்த வேலைநிறுத்த அறிவிப்பு நோட்டீஸை என்எல்சி இந்தியா நிர்வாகம் திருப்பி அனுப்பியது. 
  இதுதொடர்பாக என்எல்சி மனித வளத் துறை  இயக்குநருக்கு அந்தச் சங்கத்தின் பொதுச் செயலர் கே.வெங்கடேசன் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
  என்எல்சி இந்தியா நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்களின் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, 11.12.17 அன்று என்எல்சி நிர்வாகத்திடம் வேலைநிறுத்த நோட்டீஸ் அளிக்கப்பட்டது. நோட்டீஸை பெற்றுக் கொண்ட நிர்வாகம், கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, ஒப்பந்ததாரர்களிடம்தான் வேலைநிறுத்த நோட்டீஸை வழங்க வேண்டும் எனத் திருப்பி அனுப்பியுள்ளது. இது தொழில் தகராறு சட்டத்துக்கு முற்றிலும் முரணானது.
  கடந்த 2001 -ஆம் ஆண்டு முதல் என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில், பலமுறை வேலைநிறுத்த நோட்டீஸை அளித்தது மட்டுமல்லாது,  பல முத்தரப்பு ஒப்பந்தங்களையும் செய்திருக்கிறது.
  எனவே, அளிக்கப்பட்ட வேலைநிறுத்த நோட்டீஸை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை. தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் எனக் 
  கூறியுள்ளார்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai