சுடச்சுட

    

    திருப்பாதிரிபுலியூர் கோயிலில் டிச. 16 -இல் அனுமன் ஜெயந்தி 

    By DIN  |   Published on : 15th December 2017 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பாதிரிபுலியூரில் அமைந்துள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் வருகிற 16, 17 -ஆம் தேதிகளில் அனுமந் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.
    இதையொட்டி,  அந்த இரு நாள்களிலும் மாலை 5 மணிக்கு  ஸ்ரீ உ.வே.வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் சிறப்பு உபன்யாசம் நடைபெறுகிறது. 
    அனுமன் அவதார தினமான ஞாயிற்றுக்கிழமை (டிச. 17) காலை 10 மணிக்கு சீதாலட்சுமண ஆஞ்சநேய சமேத ஸ்ரீ கோதண்டராமருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். மாலை 6 மணிக்கு ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு 10,008 வட மாலை சாத்துதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கோயில் செயல் அலுவலர் ப.முத்துலட்சுமி, தக்கார் கு.சுபத்ரா, தலைமை எழுத்தர் வி.ஆழ்வார் மற்றும் ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் கைங்கர்ய சபாவினர் செய்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai