சுடச்சுட

    

    தேசிய அறிவியல் மாநாட்டுக்கு  குளூனி பள்ளி மாணவிகள் தேர்வு

    By DIN  |   Published on : 15th December 2017 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அகமதாபாத்தில் நடைபெறவுள்ள தேசிய அறிவியல் மாநாட்டுக்குத் தேர்வு செய்யப்பட்ட நெய்வேலி குளூனி  மேல்நிலைப் பள்ளி மாணவிகளை 
    என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மனித வளத்துறை இயக்குநர் 
    ஆர்.விக்ரமன் பாராட்டினார்.
    தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கான மாநில மாநாடு சென்னை சத்யபாமா பல்கலைக்கழக வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. நிலைத்த - நீடித்த வளர்ச்சிக்கான அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் புத்தாக்கம் என்ற தலைப்பில் மாணவ, மாணவிகள் தங்களது ஆய்வுகளை சமர்ப்பித்தனர். 
    இந்த மாநாட்டை தமிழக அறிவியல் தொழில்நுட்பச் செயலர் ஆர்.சீனிவாசன்,  சென்னைப் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறை தலைவர் ரீட்டாஜான் ஆகியோர் தொடக்கி வைத்தனர். 
    மாநாட்டில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் இருந்து 298 ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டன. 
    நெய்வேலி குளூனி மேல்நிலைப் பள்ளி மாணவிகள் செய்த "ரத்த சோகையும் அன்றாட உணவும்' என்ற ஆய்வு தேசிய மாநாட்டுக்குத் தேர்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வை பள்ளியின் விலங்கியல் துறை ஆசிரியை சுதா பிரசாத் வழிகாட்டுதலின் பேரில், பிளஸ் 2 பயிலும் மாணவிகள் ஆர்.பவித்ரா தேவி, எஸ்.பவித்ரா, டி.கனிகா, எஸ்.கமலா, பி.கீர்த்திகா கொண்ட குழுவினர் செய்திருந்தனர். 
    அகமதாபாத்தில் நடைபெறும் தேசிய மாநாட்டுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவிகளையும், வழிகாட்டி ஆசிரியையும் 
    என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மனித வளத்துறை இயக்குநர் ஆர்.விக்ரமன், பள்ளி முதல்வர் ஜாய்ஸ் ரோசலின், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கடலூர் மாவட்டத் தலைவர் தாமோதரன்,  நெய்வேலி கிளை  இயக்கத் தலைவர் பாலகுருநாதன் ஆகியோர் பாராட்டினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai