Enable Javscript for better performance
போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டம்

    By DIN  |   Published on : 15th December 2017 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக கடலூர் மண்டலத் தலைமை அலுவலகம் எதிரே வியாழக்கிழமை முதல் தொழிற்சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    பேச்சுவார்த்தை நடத்தியும்,  ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஓராண்டாக நிறைவேற்றாத நிர்வாகத்தின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும்,  அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் நிலுவைத் தொகையை உடனே வழங்க வலியுறுத்தியும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்குத் தர வேண்டிய ரூ. 5 ஆயிரம் கோடியை தமிழக அரசு வழங்கக் கோரியும் தொமுச தலைமையில் அரசுப் போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
    இந்த நிலையில்,  முன்னரே அறிவித்தபடி தமிழ்நாடு முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கத்தினர் வியாழக்கிழமை முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மண்டலத்தில் உள்ள கடலூர்,  விருத்தாசலம், சிதம்பரம், வடலூர், பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில் ஆகிய பணிமனைகளைச் சேர்ந்த போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் வியாழக்கிழமை கடலூரில் உள்ள மண்டலத் தலைமை அலுவலகத்தில் காலை 8 மணி முதல் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
    தொமுச மண்டலத் தலைவர் பழனிவேல் தலைமையில் சிஐடியு தொழிற்சங்கத்தின் பாஸ்கரன், பாட்டாளி தொழிற்சங்கத்தின் வீரமணி, எம்எல்எப் மணிமாறன், விதொமு கருணாநிதி, தேமுதிக தொழிற்சங்கத்தின் தண்டபாணி உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளுடன், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்பப் பணியாளர்களும் காத்திருப்புப் போராட்டத்தில் 
    பங்கேற்றனர்.  இந்தக் காத்திருப்புப் போராட்டம் வெள்ளிக்கிழமையும் தொடரும் என தொமுச மண்டலத் தலைவர் பழனிவேல் தெரிவித்தார். போராட்டம் காரணமாக குறைந்தளவே அரசுப் பேருந்துகள் இயங்கின.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai