சுடச்சுட

  

  மீனவர்கள் உயிரிழந்த சம்பவம்:  கடலூரில் நாளை பாமகவினர் ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 15th December 2017 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஒக்கி புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி,  ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட பாமக சார்பில், கடலூரில் சனிக்கிழமை (டிச. 16) அறப் போராட்டம் நடைபெற உள்ளதாக அந்தக் கட்சியின் மாநிலத்  துணைப் பொதுச் செயலர் பழ.தாமரைக்கண்ணன் தெரிவித்தார்.
  இதுதொடர்பாக அவர் விடுத்த செய்திக் குறிப்பு: 
   கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 98 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. 
  ஒக்கி புயல் தாக்கியது முதல் இதுநாள் வரை தேடிக் கண்டுபிடித்த 98 மீனவச் சகோதரர்களின் உயிர்களை காப்பாற்றாததைக் கண்டித்தும், மீட்கப்படாமல் உள்ள 500 மீனவர்களை மத்திய - மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் மீட்க வேண்டும். 
  உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ. 50 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தியும், ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட பாமக சார்பில் சனிக்கிழமை (டிச. 16) காலை 10 மணி அளவில் கடலூர் தலைமை தபால் அலுவலகம் எதிரே அறப் போராட்டம் நடைபெற உள்ளது.
  இந்தப் போராட்டத்தில் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, சொத்துப் பாதுகாப்புக் குழுத் தலைவர் ஆர்.கோவிந்தசாமி, தேர்தல் பணிக் குழுவைச் சேர்ந்த அருள்மொழி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாக  அதில் தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai