சுடச்சுட

    

    சிதம்பரம் அருகே குமராட்சி வர்த்தகர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் வியாழக்கிழமை தேர்வு செய்யப்பட்டனர்.
    சிதம்பரம் அருகே குமராட்சியில் வர்த்தக சங்கத்தின் புதிய நிர்வாகிகள்  மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி,  வியாழக்கிழமை வர்த்தக சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் பதவியேற்பு விழா குமராட்சியில் நடைபெற்றது. 
    இதில், குமராட்சி வர்த்தக சங்கத்தின் தலைவராக கே.ஆர்.ஜி.தமிழ்வாணன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். கெளரவத் தலைவராக  சக்கரவர்த்தி, செயலராக எஸ்.மணிவண்ணன் , பொருளாளராக  ஜே.ஹெச்.எம்.அன்சாரி , ஒருங்கிணைப்பாளராக அப்தூல் பாசித்,  துணைத் தலைவராக சுப்ராயுலு , துணைச் செயலராக .துரைசிங்கம், ஆலோசகராக கோவிந்தராஐலு ,  அவைத் தலைவராக திரு.நாதன், அமைப்பாளராக திரு.பாண்டிதுரை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai