சுடச்சுட

    

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயற்குழுக் கூட்டம்

    By DIN  |   Published on : 15th December 2017 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் பாஜகவினர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எதிராக விமர்சனம் செய்து வருவது, கடலூர் மாவட்டத்தில் பாமகவினர் தலித் மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருவது, மீனவ மக்களுக்காகப் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், மண்டலச் செயற்குழுக் கூட்டம் வடலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலர் திருமாறன் தலைமை வகித்தார். கடலூர் நாடாளுமன்றத் தொகுதியின் செயலர்  பா.தாமரைச்செல்வன், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் செயலர் வ.க.செல்லப்பன், மாவட்டச் செயலர்கள் பால.அறவாழி, கருப்பசாமி, முல்லைவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடலூர் நகரச் செயலர் 
    கண்ணன் வரவேற்றார். 
    கூட்டத்தில் மாநில அமைப்புச் செயலர் திருமார்பன் கலந்து கொண்டு பேசினார். மாவட்டப் பொருளாளர்கள் துரை.மருதமுத்து, கங்கை அமரன், மாவட்டத் துணைச் செயலர்கள் செல்வமணி, திராவிடமணி, அஸ்கர் அலி, செய்தித் தொடர்பாளர் திருவரசு, தொகுதிச் செயலர்கள் குறிஞ்சிப்பாடி ஜெயக்குமார், நெய்வேலி அதியமான், விருத்தாசலம்  அய்யாயிரம், தொகுதித் துணைச் செயலர்கள் சிற்றரசு, பவர் ரமேஷ், மாநில நிர்வாகிகள் அன்பழகன், சுந்தர்,  செந்தமிழ், குறிஞ்சிவளவன், பா.ரா.முரளி, குரு, முத்தையன், அன்பரசன், சரஸ்வதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள்,  ஒன்றியச் செயலர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வடலூர் நகரச் செயலர் ஜோதிமணி நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai