சுடச்சுட

    

    விளையாட்டு வீரர்கள்  ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 15th December 2017 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக் குறிப்பு: விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று, தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. 
    இந்தத் தொகையைப் பெறுவதற்கு தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பெற்றிருந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
    மத்திய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகள், அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள்,  இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய,  சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். 2017 ஏப்ரல் அன்று 58 வயது பூர்த்தியடைந்தவராக இருத்தல் வேண்டும்.  விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ. 6 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மற்ற ஓய்வூதியங்கள் பெறக் கூடாது. மேலும், முதியோருக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற முடியாது.
    தகுதியானவர்கள் விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்திலிருந்து (‌w‌w‌w.‌s‌d​a‌t.‌t‌n.‌g‌o‌v.‌i‌n) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட விளையாட்டு - இளைஞர் நலன் அலுவலரிடம் வருகிற 31- ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai