சுடச்சுட

  

  கடலூரில் ஆய்வுக் கூட்டம் நடத்திய ஆளுநர் அதிகாரிகளுக்கு ஊக்கமளித்து அறிவுரை வழங்கியதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே கூறினார். 
  கடலூரில் வெள்ளிக்கிழமை அனைத்துத் துறை அதிகாரிகளுடன்,  மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே கூறியதாவது: கடலூர் வருகை தந்த ஆளுநர்,  தூய்மை இந்தியா திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டார்.  இதையடுத்து,  ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அவர்,  கடலூர் மாவட்டத்தின் தகவல்களைக் கேட்டறிந்தார்.  அனைத்து துறை அதிகாரிகளுடன் பேசிய ஆளுநர்,  அனைவரும் திட்டப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ஊக்கமளித்தார். 
   கடலூரில் தூய்மைப் பணி சிறப்பாக நடப்பதாக பாராட்டிய அவர்,  தூய்மை இந்தியா திட்டத்தில் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தினார். கடலூர் மாவட்டம் புயல் பாதிப்பில் சிக்கிய நிலை குறித்தும் கேட்டறிந்து,  அரசுத் திட்டப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார் என்றார் ஆட்சியர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai