Enable Javscript for better performance
அதிகார வரம்பை மீறிச் செயல்படுகிறார்: தமிழக ஆளுநர் மீது திமுக புகார்- Dinamani

சுடச்சுட

    

    அதிகார வரம்பை மீறிச் செயல்படுகிறார்: தமிழக ஆளுநர் மீது திமுக புகார்

    By DIN  |   Published on : 16th December 2017 01:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக ஆளுநர் தனது அதிகார வரம்பை மீறிச் செயல்படுவதாக திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
    கடலூரில் அரசுத் திட்டப் பணிகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால்  புரோகித் வெள்ளிக்கிழமை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, திமுகவினர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் கடலூர் பாரதி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் கலந்துகொண்டனர்.  இதனால், அந்தச் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீஸார் அப்புறப்படுத்தினர்.
    அப்போது, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியதாவது:
    மாநில அரசின் அதிகாரங்களில் தலையிடும் வகையில் ஆளுநர் ஆய்வு மேற்கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்படி, கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, கருப்புக்கொடி காட்டி ஆளுநருக்கு எதிர்ப்புத் தெரிவித்தோம். ஆளுநர் தனது அதிகார வரம்பை மீறிச் செயல்படுகிறார். ஆளுநருக்கு கள ஆய்வு செய்ய அதிகாரம் இல்லை என்றார் அவர்.
    முன்னாள் எம்எல்ஏ புகழேந்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் முல்லைவேந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai