சுடச்சுட

  

  கோயில் நிலங்களை மாநில அரசு மீட்க  வேண்டும் என ஆளுநரிடம் பாஜக சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. 
  கடலூர் சுற்றுலா மாளிகையில் வெள்ளிக்கிழமை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம்  பாஜக கடலூர் மாவட்ட பொதுச்செயலர் சக்திகணபதி அளித்த மனு: கடலூர் மாவட்டத்தில் நீர் மேலாண்மை இல்லாததாலும், நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாலும் மழைக் காலத்தில் தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது.
  கடலூர் இயற்கை துறைமுகத்துக்கு மாநில அரசு முக்கியத்துவம் அளிக்கவில்லை. கடலூர் தொழில்பேட்டையில் 80 சதவீத தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. இதனால், மாவட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. 
  வேளாண்மை, மீன்பிடித்தல், நெசவு, பாத்திரம் தயாரித்தல் தொழில்கள் அடிப்படை தொழில்களாக இருப்பதால் மாநிலஅரசு இவற்றைப் பாதுகாக்க வேண்டும். அபகரிக்கப்பட்டுள்ள கோயில் நிலங்களை மாநில அரசு மீட்டுத்தர வேண்டும். மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க நடவடிக்க எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai