Enable Javscript for better performance
பண்ருட்டி ரயில்வே மேம்பாலப் பணியை விரைந்து முடிக்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    பண்ருட்டி ரயில்வே மேம்பாலப் பணியை விரைந்து முடிக்கக் கோரிக்கை

    By DIN  |   Published on : 16th December 2017 01:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பண்ருட்டி ரயில்வே மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. 
    கடலூர் சுற்றுலா மாளிகையில் வெள்ளிக்கிழமை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலர் ராம.ரவிக்குமார் அளித்த மனு: கடலூர் மாவட்டத்தில் கோயில் இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்த வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.
    பாஜக வணிகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜெ.வினோத் குமார்அளித்த மனுவில், பண்ருட்டி ரயில்வே மேம்பாலம் பணியை விரைந்து முடிக்க வேண்டும். சொத்து வரி சீராய்வு முறையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.  
    கடலூர் அனைத்து பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வெண்புற குமார் அளித்துள்ள மனுவில், கடலூரில் அரசு மருத்துக் கல்லூரி, சட்டக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க வேண்டும். புதை சாக்கடை திட்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai