சுடச்சுட

  

  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் கட்டமைப்பியல் துறையில், இந்திய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் சார்பில் கல்லூரி பேராசிரியர்களுக்கான இருவார வேலைவாய்ப்புத் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் அண்மையில் தொடங்கியது.
   இதில் தமிழகம் முழுவதும் இருந்தும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 60 பேராசிரியர்கள் பங்கேற்றனர். பயிலரங்கை பல்கலைக்கழக துணைவேந்தர் செ.மணியன் தொடக்கி வைத்தார். அவர் பேசுகையில், கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு புதிய பாடத் திட்டத்தை வரையறை செய்ய வேண்டியதன் அவசியம், படிக்கும் காலத்திலேயே மாணவர்கள் செய்முறைப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். 
   மேலும் அவர் கூறுகையில், அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சுமார் 10 லட்சம் பேரை ஒருங்கிணைத்து புதிதாக முன்னாள் மாணவர்கள் சங்கம் விரைவில் தொடங்க உள்ளதாகவும், அதன் மூலம் தற்போது பயிலும் மாணவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உருவாக்க முடியும் என்றார். 
   விழாவில், ஈரோடு யுஆர்சி கட்டுமான நிறுவன மேலாண்மை இயக்குநர் சி.தேவராஜன் பங்கேற்று வாழ்த்துரையாற்றினார். பொறியியல் புல முதல்வர் செ.ஆண்டனி ஜெயசேகர் தலைமை வகித்துப் பேசினார். கல்வித் திட்ட இயக்குநர் கே.மணிவண்ணன், கட்டமைப்பியல் துறைத் தலைவர் ஆர்.எம்.செந்தாமரை, இணைப் பேராசிரியர் செ.திருஞானசம்பந்தம், துணைப் பேராசிரியர் ஆர்.எஸ்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
   துணைப் பேராசிரியர் ஜெ.சரவணன் நன்றி கூறினார்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai