Enable Javscript for better performance
பாசன விவசாயிகள் சங்கக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பாசிமுத்தான் ஓடை பாசனப் பகுதிக்குள்பட்ட குருமாந்திட்டு வாய்க்கால், மீதுக்குடி வாய்க்கால், சித்தோடை வடிகால் வாய்க்கால்களின் பாசன விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் மீதிகுடி கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
     கூட்டத்துக்கு, பாசிமுத்தான்ஓடை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பெ.ரவீந்திரன் தலைமை வகித்தார். பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளர் சிவசங்கரன், மீதிகுடி வீரபாண்டியன், கோவிலாம்பூண்டி ஜனநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கோவிலாம்பூண்டி, மீதிகுடி,  சிதம்பரநாதன்பேட்டை, காரப்பாடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பெருமளவில் பங்கேற்றனர். 
     கூட்டத்தில், தமிழக அரசு அறிவித்துள்ள குடிமராமத்து திட்டம் மூலம்  தூர்வாரும் பணிகளை ஒற்றுமையாக செயல்பட்டு நிறைவேற்றுவது என்றும், அளவையாளர்களை கொண்டு வாய்க்கால்களை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என்பன உள்ளிட்ட தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன. விவசாயி ராமு நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai