சுடச்சுட

  

  ஒக்கி புயலில் காணாமல் போன கடலூர் மாவட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவ அமைப்பினர் கடலூரில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனர். 
   இதுகுறித்து கடலூர் தேவனாம்பட்டினம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் உள்ளிட்டோர் அளித்த மனு: கடலூர் மீனவ கிராமங்களைச் சேர்ந்த 19 மீனவர்கள் கன்னியாகுமரியிலிருந்து மீன் பிடிக்கச் சென்று, மாயமாகியுள்ளனர். 
  இது தொடர்பாக அமைச்சர்கள், அரசு அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் பயனில்லை. எனவே, அரசிடம் நிவாரணம் கேட்டால் மாயமானவர்கள் 7 ஆண்டுகளாகியும்  கிடைக்கவில்லை என்றால்தான்,  இறந்தவர்களாகக் கருதி நிவாரணம் வழங்க முடியும் எனத் தெரிவிக்கின்றனர். 
  கன்னியாகுமரியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி டிசம்பர் 25-ஆம் தேதிக்குள் கரை திரும்பிவிடுவர். 
  இந்த முறை அவ்வாறு கரை திரும்பாத மீனவர்களை இறந்ததாகக் கருதி, அவர்கள் குடும்பத்தினருக்கு அரசின் நிவாரணமும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கவேண்டும் என மனுவில் கோரியுள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai