சுடச்சுட

    

    மின் சேமிப்பை வாழ்க்கை முறையாகப் பாவிக்க வேண்டும்: என்எல்சி இந்தியா இயக்குநர்

    By DIN  |   Published on : 16th December 2017 01:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மின்சக்தி சேமிப்பை வாழ்க்கை முறையாகப் பாவிக்க வேண்டும் என 
    என்எல்சி இந்தியா நிறுவன இயக்குநர் ராக்கேஷ்குமார் கூறினார்.
    என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில், இயற்கை வளங்களை சிக்கனமாகப்  பயன்படுத்த வலியுறுத்தி, ஒவ்வோர் ஆண்டும் டிச.14-ஆம் தேதி தொடங்கி  ஒருவார காலம் ஆற்றல் சேமிப்பு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.  அதன்படி, நிகழாண்டுக்கான ஆற்றல் சேமிப்பு வார விழா நெய்வேலி லிக்னைட் அரங்கில்  வியாழக்கிழமை தொடங்கியது. இதில், சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் செ.மணியன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியதாவது: 70 சதவீத மின்சாரம் அனல்  மின் நிலையங்களில் இருந்து வழங்கப்படுகிறது. நிலக்கரியை எரிப்பதால்  ஏற்படும் சுற்றுச்சூழல் மாசை தடுக்கவும், இயற்கை வளம் விரைவாகக் குறைந்து வருவதாலும் மின்சாரத்தை  சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்  என்றார்.
    மேலும், என்எல்சி இந்தியா நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள திறன் மேம்பாட்டு மையம் மூலம், சூரிய ஒளி மின் நிலையம் அமைப்பது, பராமரிப்பது போன்ற துறைகளில் சான்றிதழ், பட்டயப் படிப்புகளை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வழங்கவிருப்பதாகவும் தெரிவித்தார். 
    நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராகப் பங்கேற்ற என்எல்சி இந்தியா நிதித் துறை இயக்குநர் ராக்கேஷ் குமார் பேசியதாவது: அடுத்த அரை நூற்றாண்டில் இயற்கை வளங்களான நிலக்கரி, பழுப்பு நிலக்கரி, பெட்ரோலியம் போன்றவை குறைந்துவிட வாய்ப்புள்ளது. எனவே, நமது சிக்கன நடவடிக்கைகளின் மூலம் வருங்கால சந்ததிகள் பயன்பெற, இயற்கை வளங்களை விட்டுச் செல்ல வேண்டும். மின்சக்தி சேமிப்பை வாழ்க்கை முறையாகப் பாவிக்க வேண்டும் என்றார். 
    மேலும், வியாழக்கிழமை புதுதில்லியில் நடைபெற்ற தேசிய ஆற்றல் சேமிப்பு விழாவில் என்எல்சி நிறுவன சுரங்கங்கள் ஆற்றல் சேமிப்புக்கான விருதுகளைப் பெற்றதை சுட்டிக்காட்டினார். நிகழ்ச்சியில் மின்சக்தி சிக்கனம் குறித்த கையேட்டை செ.மணியன் வெளியிட,  ராக்கேஷ்குமார் பெற்றுக்கொண்டார்.
    விழாவில் என்எல்சி மின் துறை இயக்குநர் வி.தங்கபாண்டியன் வாழ்த்துரை வழங்கினார். திட்டமிடல் துறை தலைமைப் பொது மேலாளர் ஆர்.அருள் வரவேற்றார். இயக்குநர்கள் பி.செல்வக்குமார், ஆர்.விக்ரமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆற்றல் சேமிப்புத் துறை பொதுமேலாளர் மணிவண்ணன் நன்றி கூறினார். விழாவில், ஆற்றல் சேமிப்பு தொடர்பாக நெய்வேலி கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர்,  ஆற்றல் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணியாகச் சென்றவர்கள், பிரதான அங்காடி பகுதியில் மனிதச் சங்கிலியாக அணிவகுத்தனர். 
    இதேபோல, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் அனைத்து அலுவலகங்கள், தொழிலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai