சுடச்சுட

    

    குறிஞ்சிப்பாடி ஒன்றியம், கருங்குழியில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை தொடக்க விழா  அண்மையில் நடைபெற்றது.
    இந்தப் பள்ளியில் சுமார் 200 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு, ஏசி, ஸ்மார்ட் போர்டு, புரொஜெக்டர் கருவி உள்ளிட்ட வசதிகள் கொண்ட ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டது. இதற்காக சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்களை பள்ளி ஆசிரியர்கள், டி.ஆர்.எம்.சாந்தி கல்வி அறக்கட்டளையினர் வழங்கினர்.
    ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழாவுக்கு, குறிஞ்சிப்பாடி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சவுரிமுத்து தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் அந்தோணி ஜோசப் முன்னிலை வகித்தார். டி.ஆர்.எம். சாந்தி கல்வி அறக்கட்டளை நிறுவனர் ராஜமாரியப்பன் வகுப்பறையை திறந்து வைத்தார்.
    மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சாந்தி ராஜமாரியப்பன் பரிசுகளை வழங்கினார். ஆசிரியர்கள் ஜான்பால், சின்னப்பராஜ், ஆரோக்கியதாஸ், லயோலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    ஆசிரியை ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai