சுடச்சுட

    

    அரசு உதவித் தொகையை முறையாக வழங்கக் கோரி, வெண்கரும்பூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.
    முதியோர், மாற்றுத் திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்டோர் உள்பட சமூகத்தில் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வழங்கப்படும் உதவித் தொகையை, பயனாளிகள் வங்கிக்குச் செல்லாமலே பெற்றுக்கொள்ளும் வகையில் வாடிக்கையாளர் சேவை மையங்கள் வங்கிகள் இல்லாத கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
    அதன்படி, திட்டக்குடி அடுத்துள்ள வெண்கரும்பூர் ஊராட்சியிலுள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தில் சுமார் 500 பேர் மாதாந்திர உதவித்தொகை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சரியான முறையில் உதவித் தொகை வழங்கப்படவில்லையாம். மேலும், உதவித் தொகை பாதி பயனாளிகளுக்கு மட்டுமே வந்துள்ளதாக தெரிவிப்பதோடு, வங்கி கணக்கு புத்தகம், வங்கி அடையாள அட்டை போன்றவையும் முறையாக வழங்கப்படவில்லையாம். எனவே, சேவை மைய பணியாளரை மாற்றக் கோரி 100-க்கும் மேற்பட்டவர்கள் சனிக்கிழமை ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai