சுடச்சுட

    

    திட்டக்குடி பேருந்து நிலையத்தில் கழிவுநீரை அகற்ற வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 17th December 2017 04:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திட்டக்குடி பேருந்து நிலையத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கும் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தியது.
    இதுகுறித்து அந்தக் கட்சியினர் நகரத் தலைவர் சாகுல் ஹமீது தலைமையில், திட்டக்குடி பேரூராட்சி செயல் அலுவரிடம் சனிக்கிழமை அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
    திட்டக்குடி பேருந்து நிலையத்தில் மழைக் காலத்தில் தேங்கும் தண்ணீர் வெளியே செல்லமுடியாமல் அப்பகுதியில் உள்ள சாக்கடை வாய்காலில் தேங்கி நிற்கும் நிலை தொடர்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பிரச்னை தொடர்கிறது.
    கழிவுநீர் வடிந்துச் செல்ல வழியில்லாததால் பேருந்து நிலையம் முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, பல்வேறு தொற்று நோய் ஏற்படவும் காரணாக அமைகிறது. பேருந்து நிலையத்துக்கு உள்ளே செல்ல வேண்டிய மாணவ, மாணவிகள், பொதுமக்கள் முழங்கால் அளவுக்கு தேங்கியிருக்கும் சாக்கடை நீர் கலந்த மழைநீரில்தான் செல்ல வேண்டியுள்ளது.
    எனவே, கழிவுநீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டது.
    அப்போது, ஜனாப் நஜூருல்லா மிஸ்பாகி, நிர்வாகிகள்
    கரீம், இதயத்துல்லா, சையத் சுபேதர், அமான்உல்லா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai