சுடச்சுட

  

  கிள்ளை பகுதியில் வேளாண் பொறியியல் துறை சார்பில் நடைபெறும் உவர் நில சீரமைப்புப் பணிகளை, தலைமைப் பொறியாளர் தெய்வேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.
  சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை, நஞ்சைமகத்துவாழ்க்கை, சி.மானம்பாடி, பின்னத்தூர், தில்லைவிடங்கன் ஆகிய கிராமங்களில் வேளாண் பொறியியல் துறை சார்பில் உவர் நிலம் சீரமைப்புப் பணிகள் மூலம், பொன்னந்திட்டு வெள்ளாற்றில் இருந்து பிச்சாவரம் வரை பக்கிம்காம் கால்வாய் கரையைப் பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
  மேலும், கீழச்சாவடி ஆற்று மதகில் இருந்து குச்சிப்பாளையம் வரை வடிகால் வாய்க்கால் வெட்டி ஆழப்படுத்தி தடுப்பணை அமைத்தல், போக்குவரத்துக்கு சிறு பாலங்கள் அமைத்தல், நெல் விதை, மருந்து வாங்க மானியம் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் ரூ.3 கோடியே 23 லட்சம் செலவில் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் பணிகள் முடிந்துள்ளன.
  இந்தப் பணிகள் குறித்து சென்னை தலைமை அலுவலக வேளாண் பொறியியல் துறை தலைமைப் பொறியாளர் (பொது) தெய்வேந்திரன், தலைமைப் பொறியாளர் (வேளாண் பொறியியல் பிரிவு) மணி ஆகியோர் தலைமையில் 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, இந்தப் பணிகள் குறித்து கடலூர் மாவட்ட வேளாண் பொறியியல் துறைப் பொறியாளர் இளங்கோவன், உதவிப் பொறியாளர் தமிழ்ச் செல்வன், நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். விவசாய சங்க நிர்வாகிகளும் உடனிருந்தனர். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai