சுடச்சுட

  

  புயலில் காணாமல் போன மீனவர்கள்நிவாரணம் கோரி பாமக ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 17th December 2017 04:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஒக்கி புயலில் சிக்கி காணாமல் போன தமிழக மீனவர்களை மீட்பதோடு, உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, கடலூரில் பாட்டாளி மக்கள் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  மாவட்ட ஆட்சியரின் பழைய அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் பழ.தாமரைக்கண்ணன் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச் செயலர் த.அசோக்குமார், மாவட்டச் செயலர்கள் இரா.ஆறுமுகம், இ.கே.சுரேஷ், ந.செ.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  மாநில பொதுச் செயலர் வடிவேல் ராவணன், சொத்துப் பாதுகாப்புக் குழுத் தலைவர்
  இரா.கோவிந்தசாமி, துணைத் தலைவர் ப.சண்முகம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் வடிவேல் ராவணன் பேசுகையில், ஒக்கி புயலில் காணாமல்போன மீனவர்களை மீட்கும் முயற்சியில் மத்திய-மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட வேண்டும். உயிரிழந்த மீனவர்களது குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் வழங்குவதோடு, அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். கடலில் தேடியும் இதுவரை கண்டுபிடிக்க முடியாதவர்களை இறந்தவர்களாக அறிவித்து, அவர்களது குடும்பத்தினருக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்றார்.
  ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகிகள் முத்து.வைத்திலிங்கம், நா.முருகவேல், கோ.சந்திரசேகரன், மாவட்ட இளைஞரணித் தலைவர் வாட்டர்மணி, மாவட்டத் தலைவர்கள் ராஜ்குமார், ராஜசேகர், கு.குமரவேல், மாவட்ட அமைப்புச் செயலாளர் பி.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக மாவட்டச் செயலர் சண்.முத்துகிருஷ்ணன் வரவேற்றார். நகர இளைஞரணிச் செயலர் சிலம்பரசன் நன்றி கூறினார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai