Enable Javscript for better performance
பைக் திருட்டு: இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    சிதம்பரம் நகரில் பைக்குகளை திருடியதாக இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
    கிள்ளை காவல் நிலைய உதவி ஆய்வாளர் இளையராஜா, சிறப்பு உதவி ஆய்வாளர் தனசேகரன் மற்றும் தனிப்படை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த சிதம்பரம் பொன்னம்பலம் நகரைச் சேர்ந்த விஷ்ணு (22) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.
    விசாரணையில், அவர் சிதம்பரம் நகரில் கீழவீதி, வண்டிகேட் பகுதியில் உள்ள சரஸ்வதி நகர் பகுதியில் இரு பைக்குகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் விஷ்ணுவை கைது செய்து, அவரிடமிருந்து இரு பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai