சுடச்சுட

    

    ராகவேந்திரர் கோயிலில் இன்று ஸ்ரீவித்யாதீஸதீர்த்த சுவாமி அருளுரை

    By DIN  |   Published on : 17th December 2017 04:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் கூத்தப்பாக்கத்திலுள்ள ஸ்ரீராகவேந்திரர் கோயிலில் ஸ்ரீவித்யாதீஸதீர்த்த சுவாமி ஞாயிற்றுக்கிழமை (டிச.17) அருளுரை வழங்குகிறார்.
    கர்நாடகம் மாநிலத்திலுள்ள விஜயநகர சாம்ராஜியத்தின் அரசனாகவும், ஆஸ்தான குருவாகவும் விளங்கியவர் வியாஸராஜ சுவாமிகள். அவரது பரம்பரையில் தற்போது பீடாதிபதியாக இருந்து வரும் ஸ்ரீஸ்ரீ வித்யாதீஸதீர்த்த சுவாமிகள் கடலூர் கூத்தப்பாக்கத்திலுள்ள ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு வருகிறார். அவருக்கு ஆலய நிர்வாகத்தினர் சார்பில் பூர்ண கும்ப மரியாதை வழங்குதல் நிகழ்ச்சியும், 6 மணிக்கு சுவாமியின் ராஜதர்பார், தீவட்டி சலாம் அருளாசி, தீபாராதனை, பலமந்த்ராட்சதை நடைபெறுகிறது. தொடர்ந்து திங்கள்கிழமை காலை 7 மணிக்கு சுவாமிகளுக்கு பாத பூஜையும், முத்ராதாரணமும், 9 மணிக்கு சுவாமிகளின் ஆஸ்தான பூஜையும், பலமந்த்ராட்சதையும் நடைபெறுகிறது.
    எனவே, பக்தர்கள் அனைவரும் இந்த நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டுமென ஸ்ரீ மத்வ சித்தாந்த சேவா சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai