சுடச்சுட

    

    ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவரானதால் பாஜகவுக்கு பிரகாசமான எதிர்காலம்

    By DIN  |   Published on : 17th December 2017 04:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றுள்ளதால் பா.ஜ.க.வின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா கூறினார்.
    கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக மூத்த நிர்வாகி அகோரத்தை சனிக்கிழமை எச்.ராஜா சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்து கோயில்கள் குறித்து திருமாவளவன் கூறிய கருத்தை கண்டித்ததற்காக, பழிவாங்கும் நோக்கில் அகோரம் கைது செய்யப்பட்டுள்ளார். உடல்நலம் சரியில்லாமல் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே, அவரை சந்தித்து நலம் விசாரித்தேன். தமிழகத்தில் நிர்வாகமே இல்லை.
    எனவே, இந்தச் சம்பவம் தொடர்பாக யாரிடம் சென்று முறையிடுவது? நாகப்பட்டினம் மாவட்டம், திருவெண்காடு காவல் நிலையம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கட்டப் பஞ்சாயத்து மையமாக உள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்றுள்ளதால் பாஜகவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்றார் அவர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai