சுடச்சுட

    

    ராகுல் காந்தி பொறுப்பேற்பு: காங்கிரஸார் கொண்டாட்டம்

    By DIN  |   Published on : 17th December 2017 04:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல்காந்தி சனிக்கிழமை பொறுப்பேற்றதை அடுத்து, கடலூர் மாவட்டத்தில் அந்தக் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கடலூரில் இளைஞர் காங்கிரஸார் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். மஞ்சக்குப்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.கலையரசன் தலைமை வகித்தார். தொழிலாளர் பிரிவு மாவட்டத் தலைவர் டி.ராம்ராஜ், மாநில இளைஞரணிச் செயலர்கள் ராமதுரை, மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் ஏ.எஸ்.சந்திரசேகரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். தலைமைத் தபால் நிலையம் பகுதியிலுள்ள காந்தி, காமராஜர், அம்பேத்கர் சிலைகளுக்கு ஊர்வலமாகச் சென்று மாலை அணிவித்தனர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
    நிகழ்ச்சியில் மாநில மீனவரணிச் செயலர் கார்த்திகேயன், சிறுபான்மைப் பிரிவு மாவட்டத் தலைவர் ரஹீம், விவசாயப் பிரிவு மாவட்டத் தலைவர் தேவநாதன், இளைஞர் பிரிவு மாவட்ட பொதுச் செயலர்கள் ஷான்வாஸ், முகேஷ், கலைச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக கடலூர் தலைவர் வி.குமார் வரவேற்றார். பண்ருட்டி தலைவர் கே.வெங்கடேஷ் நன்றி கூறினார்.
    முத்தாண்டிக்குப்பம்: பண்ருட்டி ஒன்றியம் முத்தாண்டிக்குப்பம் கடை வீதியில் கடலூர் மாவட்டத் தலைவர் ஆர்.ராதாகிருஷ்ணன் கட்சிக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். வட்டாரத் தலைவர் ராம;ஈசந்திரன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி, செயலர் ஏழுமலை, வட்டத் துணைத் தலைவர் கணபதி ஆகியோர் பங்கேற்றனர்.
    இதேபோல, கடலூர் கீரப்பாளையம், ராமபுரம் பகுதியில் வட்டாரத் தலைவர் சீத்தாராமன், நெய்வேலி, வட்டம் 21-இல் மாநில பொதுக்குழு உறுப்பினர் இளஞ்செழியன், நகரத் தலைவர் குள்ளப்பிள்ளை, ஐஎன்டியுசி பொதுச் செயலர் ரவிக்குமார், நெய்வேலி நகரிய பொதுச் செயலர் இளங்கோ ஆகியோர் முன்னிலையில் கட்சிக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
    பண்ருட்டி: பண்ருட்டி நகர காங்கிரஸ் சார்பில் நகரத் தலைவர் முருகன் தலைமையில், அக்கட்சியினர் காந்தி பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர். மாவட்ட சிறப்பு அழைப்பாளராக ஏ.கே.மணி, மாவட்ட துணை பொதுச் செயலர் சபியுல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    அங்குசெட்டிப்பாளையத்தில் வட்டார பொதுச் செயலர் மகிமைதாஸ் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai