சுடச்சுட

    

    பண்ருட்டி உழவர் சந்தை வளாகத்தில், வேளாண் துறை அதிகாரிகள்-விவசாயிகள்-நுகர்வோர் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    தமிழக அரசின் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் பண்ருட்டியில் உழவர் சந்தை அமைக்கப்பட்டது. நகரின் ஒதுக்குப்புறமான பகுதியில் உழவர் சந்தை அமைக்கப்பட்டதாலும், நுகர்வோர், விவசாயிகள் போதிய அளவில் வராததாலும் உழவர் சந்தையின் செயல்பாடு நாளடைவில் முடங்கியது. தற்போது, உழவர் சந்தைகளின் செயல்பாடுகளை மேம்படுத்தி, விவசாயிகள், நுகர்வோர் பயன்பெறும் வகையில் கூடுதல் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    இதுதொடர்பான கலந்தாய்வுக் கூட்டம், கடலூர் மாவட்டவேளாண் வணிகத் துறை துணை இயக்குநர் பி.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், பண்ருட்டி வேளாண் உதவி இயக்குநர் மோகன்ராஜ், தோட்டக்கலை உதவி இயக்குநர் (பொறுப்பு) லட்சுமிதேவி, துணை வேளாண்மை அலுவலர் (உழவர் சந்தை) எஸ்.குமார், வேளாண்மை அலுவலர்கள் பி.ஆறுமுகம், பி.தெய்வநிதி, டி.சுகன்யா, ஆர்.மகேஷ், சிறு குறு விவசாயிகள் சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நுகர்வோர் அமைப்புத் தலைவர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai