Enable Javscript for better performance
உழவர் சந்தை நுழைவு வாயிலில் செயல்படும் ஆட்டுச் சந்தையால் அவதி- Dinamani

சுடச்சுட

    

    உழவர் சந்தை நுழைவு வாயிலில் செயல்படும் ஆட்டுச் சந்தையால் அவதி

    By DIN  |   Published on : 18th December 2017 02:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வடலூரில் ஒதுக்கப்பட்ட இடத்தில் அல்லாமல், உழவர் சந்தை அருகே நடத்தப்படும் ஆட்டுச் சந்தையால் இடையூறு ஏற்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
    2009-ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது வடலூர் - பண்ருட்டி சாலையில் ரூ.22.50 லட்சம் செலவில் 15 கடைகளுடன் உழவர் சந்தை தொடங்கப்பட்டது. விவசாயிகள் தங்களது விளை பொருள்களை நேரடியாக நுகர்வோரிடம் விற்பனை செய்யும் வகையில் மாநிலம் முழுவதும் உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டன. இதனால், விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைத்தது.
    நுகர்வோரும் குறைந்த விலையில் காய்கறிகளை வாங்கி பயனடைந்தனர்.
    ஆனால், இந்த உழவர் சந்தைகள் பல பகுதிகளில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்ததால், அவற்றுக்கு மக்களிடம் நாளடைவில் வரவேற்பு குறைந்தது. இதே காரணத்தால் வடலூர் உழவர் சந்தையும் பாதிக்கப்பட்டது. தற்போது வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை முயற்சியால், கடந்த அக்டோபர் மாதம் முதல் உழவர் சந்தை புத்துயிர் பெற்று செயல்பட்டு வருகிறது. ஆனால், வடலூர் உழவர் சந்தையின் வாயில் பகுதியில் சனிக்கிழமைதோறும் ஆட்டுச் சந்தை நடைபெறுகிறது. இதனால், அந்தப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால், உழவர் சந்தைக்கு வரும் நுகர்வோரின் எண்ணிக்கை மீண்டும் குறைவதாகக் கூறப்படுகிறது.
    இதுகுறித்து வடலூர் நுகர்வோர் உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பேரவைத் தலைவர் கல்விராயர் கூறியதாவது: அதிகாரிகள் சரியான முறையில் திட்டமிடாமல், ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் உழவர் சந்தையை அமைத்துள்ளனர். வாரச் சந்தையைக் காட்டிலும் உழவர் சந்தையில் காய்கறிகள் குறைந்த விலையில் கிடைத்தாலும், நுகர்வோரின் வருகை குறைவாகவே உள்ளது.
    சனிக்கிழமைதோறும் நடைபெறும் ஆட்டுச் சந்தை அதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் நடைபெறவில்லை. மாறாக உழவர் சந்தை வாயிலில் நடைபெறுகிறது. இதனால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேட்டால் உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் பாதிக்கப்படுகின்றனர். ஆட்டுச் சந்தையை இடமாற்றம் செய்ய வேண்டும் என பேரூர் நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. உழவர் சந்தையில் மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai