சுடச்சுட

    

    கடலூர் பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்கம் முதல்வருக்கு கோரிக்கை விடுத்தது.
    இதுதொடர்பாக சங்கத்தின் மாவட்டச் செயலர் ஆர்.மனோகரன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாவட்டத் தலைநகரான கடலூரில் சுமார் 3 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால், பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள மத்திய பேருந்து நிலையம் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல், நடைபாதை ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டுள்ளது. மழைநீரோடு கழிவுநீரும் ஆங்காங்கே தேங்கி நின்று கொசு உற்பத்திக் கூடாரமாக விளங்கி வருவதோடு, பேருந்து நிலையம் முழுவதும் குப்பை தேங்கிக் கிடக்கிறது. பொதுமக்கள் பயன்படுத்தும் விதமாக காத்திருப்புக் கூடங்கள் அமைக்கப்படவில்லை. பேருந்து நிலையம் பயணிகள் பயன்படுத்தும் இடமாக இல்லாமல், வணிக வளாகமாக காட்சியளிக்கிறது. எனவே, ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சியர் மாதத்துக்கு ஒருமுறை ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பேருந்து நிலையத்திலுள்ள கடைகளை மத்திய, மாநில நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நவீன வணிகவளாகமாக அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும். அவ்வாறு அமைத்தால் பொதுமக்கள் பயனடைவதோடு, 100-க்கும் மேற்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கும் இடவசதி அளிக்க முடியும். இதனால் நகராட்சிக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும்.
    எனவே, கடலூர் மத்திய பேருந்து நிலையத்தை சீரமைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென அதில் வலியுறுத்தி உள்ளார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai