சுடச்சுட

  

  கடலூர் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படுத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூ. மாநாட்டில் வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 18th December 2017 02:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  அந்தக் கட்சியின் 22-ஆவது மாவட்ட மாநாடு விருத்தாசலத்தில் சனிக்கிழமை தொடங்கியது. 2 -ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநாட்டு நிகழ்வை மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் தொடக்கி வைத்துப் பேசினார். மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். மாநாட்டை வாழ்த்தி மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் பேசினார்.
  மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கடலூர் மாவட்டத்தில் புதிய தொழில்சாலைகளை தொடங்குவதுடன், கடலூர் துறைமுகத்தை ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்தை தொடங்க வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக அமலில் உள்ள மத்திய அரசின் வேலை நியமன தடை உத்தரவை அகற்ற வேண்டும். என்எல்சி இந்திய நிறுவனத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவோர், சொசைட்டிகளில் பணியாற்றுவோர், வீடு, நிலம் கொடுத்தோர், பணியின்போது உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும். என்எல்சி நிறுவனத்தில் அவுட்சோர்சிங் முறையைக் கைவிட வேண்டும்.
  பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் கைத்தறி, பித்தளைப் பாத்திரத் தொழில், செராமிக், முந்திரி, பொம்மை தயாரித்தல் உள்ளிட்ட சிறுதொழில்களுக்கு மின்வெட்டிலிருந்து விலக்கு அளித்து ஊக்கப்படுத்த வேண்டும். மாவட்டத்தில் தனியார் துறைகளில் பணியாற்றுவோருக்கு, கேரளத்தில் உள்ளது போல மாதம் ரூ.18 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். விவசாய விளை பொருள்களுக்கு கட்டுப்படியான விலை வழங்க வேண்டும். தமிழக அரசு முத்தரப்பு கூட்டத்தை கூட்டி கரும்புக்கான விலையை அறிவிக்க வேண்டும்.
  மாவட்டத்தில் தீண்டாமைக் கொடுமை தொடர்வதை கட்டுப்படுத்த வேண்டும். ஊரக வேலை உறுதித் திட்டத்தை அனைத்து ஒன்றியங்களிலும் அமல்படுத்த வேண்டும். இதில், ஆண்டுக்கு 250 நாள் வேலையும் ரூ.400 தினக் கூலியும் வழங்க வேண்டும். சேதமடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். கடலூரில் இருந்து புதுவைக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும். ரசாயன ஆலைகள், சர்க்கரை ஆலைகளால் சுற்றுசூழல் மாசு ஏற்படுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  விருத்தாசலம் வானொலித் திடலில் திங்கள்கிழமை மாலை மாநாட்டு நிறைவு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai