சுடச்சுட

    

    காவல் துறையைக் கண்டித்து ஆல்பேட்டை பகுதியில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
    கடலூர் மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை காவல் துறையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி, கடலூர் புதுநகர் காவல் துறையினர் ஆல்பேட்டை சோதனைச் சாவடி அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதேப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் தலைக் கவசம் அணியாமல் பைக்கில் வந்ததாகத் தெரிகிறது. அவரிடம் போலீஸார் விசாரித்தபோது அருகிலிருந்த சிலர், அவர் அதேப் பகுதியை சேர்ந்தவர் என்றும், இறைச்சிக் கடைக்கு வந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
    ஆனால், போலீஸார் அதனை ஏற்க மறுத்ததோடு, இளைஞருக்கு பரிந்து பேசியவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனராம். இதில், ஆல்பேட்டையைச் சேர்ந்த அன்பழகன் மகன் முத்துக்குமார் (32), முருகன் மகன் தமிழ்ச்செல்வன் (26) ஆகியோரை போலீஸார் தாக்கினராம்.
    இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் திரண்டு வந்து, காவல் துறையினரின் நடவடிக்கைக்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்த காவல் ஆய்வாளர் கி.சரவணன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
    இதையடுத்து மறியல் முயற்சியைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai