சுடச்சுட

    

    கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்: குடியிருப்போர் சங்கக் கூட்டமைப்பு வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 18th December 2017 02:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியது.
    இதுகுறித்து அந்தக் கூட்டமைப்பினர், கடலூருக்கு அண்மையில் வந்த தமிழக ஆளுநரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: கடலூர்-புதுவை-சென்னை ரயில் பாதை திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து ஆய்வுப் பணிகள் முடிவடைந்து, ரயில்வே வாரியம் ரயில் பாதை அமைக்க அனுமதியும் அளித்துள்ளது. எனினும், இரு மாநில அரசுகளும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதம மந்திரியின் தூய்மை இந்தியா திட்டத்தை முழுமையாக அமல்படுத்திடும் வகையில் கடலூர் நகரத்தில் அம்ருத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும்.
    கடலூர் நகரில் சாக்கடை கால்வாய்களில் கழிவுநீர் தேங்கி சுகாதாரச் சீர்க்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. எனவே, இதனை விஞ்ஞானப்பூர்வமாக தீர்க்க வேண்டும். 50 ஆண்டுகள் பழைமையான குடிநீர் குழாய்களை மாற்ற வேண்டும்.
    கடலூர் நகராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் 50 சதுர கி.மீ. அளவில் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.
    கடலூர் நகரில் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்திடும் வகையில் தேவையான இடங்களில் மேம்பாலம், பல்லடுக்கு மேம்பாலம் அமைத்திட வேண்டும். நெரிசலில் சிக்கித் தவிக்கும் பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைக்க வேண்டும். புதைச் சாக்கடைத் திட்டத்தை மற்ற வார்டுகளிலும் செயல்படுத்துவதோடு, கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
    கடலூர் நகரின் பாரம்பரியமிக்க நினைவுச் சின்னங்கள், புராதன திருத்தலங்களை மேம்படுத்தி பாரம்பரிய நகரமாக மாற்றி பாதுகாத்திட வேண்டுமென அந்த மனுவில் வலியுறுத்தி உள்ளனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai