சுடச்சுட

  

  அனுமன் ஜெயந்தியையொட்டி, கடலூர் மாவட்டத்திலுள்ள பெருமாள், அனுமன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
  திருப்பாதிரிபுலியூரில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, காலையில் சீதா, லட்சுமண, ஆஞ்சநேய சமேத
  ஸ்ரீகோதண்டராமருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. மாலை 6 மணிக்கு ஸ்ரீஆஞ்சநேயருக்கு 10,008 வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
  நிகழ்ச்சியில், கோயில் செயல் அலுவலர் ப.முத்துலட்சுமி, தக்கார் கு.சுபத்ரா, தலைமை எழுத்தர் வி.ஆழ்வார் மற்றும் ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் கைங்கர்ய சபாவினர் பங்கேற்றனர். அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, சனி, ஞாயிற்றுக்கிழமை மாலையில் உ.வே.வேளுக்குடி கிருஷ்ணனின் சிறப்பு உபன்யாசம் நடைபெற்றது.
  திட்டக்குடி: திட்டக்குடியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பட்டாச்சாரியார் பாலாஜி வரதாச்சாரியார் தலைமையில் சிறப்பு திருமஞ்சனமும், 1,008 ஸஹஸ்ர நாமாவளி, வெள்ளிக் கவச அலங்காரம் நடைபெற்றது. வெண்ணெய், வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது. ஆஞ்சநேய பக்தர்கள் குழுவினர் ஸ்ரீராம கீர்த்தனம் வாசித்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா ராஜேந்திரன் செய்திருந்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
  சிதம்பரம்: சிதம்பரம் கீழரத வீதியில் உள்ள வீரசக்தி ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, வீரசக்தி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, மாலையில் சந்தனக் காப்பு அலங்காரம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசித்தனர். இரவு வீரசக்தி ஆஞ்சநேயர் வீதிஉலா நடைபெற்றது. அபிஷேக, ஆராதனைகளை ராஜா குருக்கள் செய்தார்.
  இதேபோல, மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களிலும், ஆஞ்சநேயருக்கான தனிக் கோயில்களிலும் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai