சுடச்சுட

    

    ஓ.கீரனூர் கிராமத்தில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை கிராம இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை சீரமைத்தனர்.
    பெண்ணாடம் அருகே உள்ளது ஓ.கீரனூர் கிராமம். கடந்த 2-ஆம் தேதி பெய்த பலத்த மழையால் பெண்ணாடத்திலிருந்து பெ.பூவனூர் செல்லும் சாலையில் ஓ.கீரனூர் அருகே பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால், பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் இந்த வழியாக நடந்து சென்று வந்தனர்.
    இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் சாலையை சீரமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதையடுத்து, ஓ.கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், மாணவ, மாணவிகள் இணைந்து ஞாயிற்றுக்கிழமை சாலைப் பள்ளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பள்ளத்தில் கற்கள், மண் கொண்டு மூடி சமன் செய்து, வாகனங்கள் தடையின்றி செல்லும் நிலையை ஏற்படுத்தினர். இவர்களது முயற்சிக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai