சுடச்சுட

    

    திருத்திய ஓய்வூதியப் பலன்களை வழங்க வேண்டுமென தமிழக ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தியது.
    இந்தச் சங்கத்தின் மாதாந்திர சிறப்புக் கூட்டம் கடலூரில் மாநிலத் தலைவர் மா.கண்ணன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. கடந்த கூட்ட நடவடிக்கை குறித்து பொதுச் செயலர் பாபு.சுப்ரமணியன் பேசினார். வரவு-செலவு அறிக்கையை பொருளாளர்
    ர.திருநாவுக்கரசு, மற்ற அறிக்கையை செயற்குழு உறுப்பினர்
    ஆர்.பாண்டுரங்கன் ஆகியோர் தாக்கல் செய்தனர்.
    கூட்டத்தில், மத்திய அரசானது ஊதியக் குழுவின் பலன்கள் ஓய்வூதியர்களுக்கு 2016-ஆம் ஆண்டிலிருந்து கிடைக்கும் வகையில் அறிவித்துள்ளது. ஆனால், தமிழக அரசு அதனை இதுவரை வழங்கவில்லை. எனவே, திருத்திய ஓய்வூதியத்தை 21 மாத நிலுவையுடன் சேர்த்து வழங்க வேண்டும். ஓய்வூதியர்களின் மருத்துவப் படியை ரூ.ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வூதியர்களின் இறப்பின்போது குடும்பப் பாதுகாப்பு நிதியிலிருந்து ரூ.10 ஆயிரம் முன்பணமாக வழங்க வேண்டும். மருத்துவம் சம்பந்தமாக அளிக்கப்படும் அத்தனை சலுகைகளையும் வழங்க வேண்டும். 70 வயது நிரம்பியவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    கூட்டத்தில், நிர்வாகிகள் த.சண்முகசுந்தரம், ஆர்.தனராசு, ஆ.சஞ்சீவிராயர், ஆர்.திருநாராயணன், பி.ஆறுமுகம், ஏ.கலியபெருமாள், ஏ.பேட்ரிக் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். முன்னதாக துணைச் செயலர் எஸ்.ராமலிங்கம் வரவேற்றார். செயற்குழு உறுப்பினர் பி.குணசேகரன் நன்றி கூறினார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai