சுடச்சுட

  

  பண்ருட்டி அருகே புதிய கற்காலக் கருவிகள் கண்டெடுப்பு

  By DIN  |   Published on : 18th December 2017 02:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் புதிய கற்காலக் கருவிகள், சங்க காலப் பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன.
  பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பண்டைய கால மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள், அவர்கள் பயன்படுத்திய பொருள்கள் கிடைத்து வருகின்றன. இந்த நிலையில், பண்ருட்டிக்கு வடமேற்கே 17 கி.மீ. தொலைவில் உள்ள உளுத்தாம்பட்டு கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் புதிய கற்காலக் கருவிகள், சங்க கால மக்கள் பயன்படுத்திய பொருள்கள் கிடைத்துள்ளன.
  கள ஆய்வு செய்து இந்தப் பொருள்களை கண்டெடுத்த தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் கூறியதாவது:
  தென்பெண்ணை ஆற்றில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்ட இடத்தில் வித்தியாசமான பானை ஓடுகள் தென்பட்டன.
  தொடர்ந்து அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது, புதிய கற்காலம் முதல் சங்க காலம் வரை மக்கள் வாழ்ந்ததற்கான சான்றாக பல அரிய பொருள்கள் கிடைக்கப்பெற்றன.
  அதில், புதிய கற்கால மனிதன் பயன்படுத்திய கைக்கோடாரி, கிழங்குகளை தோண்டுவதற்கான கூர்மையான கல் ஆயுதம், சங்க காலத்தைச் சேர்ந்த கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், கிண்டி மூக்கி, வட்ட சில்லுகள், உடைந்த அகல் விளக்கு, சுடுமண் பாத்திரங்கள், முதுமக்கள் தாழியின் உடைந்த பாகங்கள், சுடுமண் குழாய்கள், உறைகிணறு போன்றவை கண்டறியப்பட்டுள்ளன. இதன் மூலம், இந்தப் பகுதி புதிய கற்காலம் முதல் சங்க காலம் வரை மக்களின் வாழ்விடமாகவும், வரலாற்று நகரமாகவும் இருந்திருக்கலாம் என்றார் அவர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai