Enable Javscript for better performance
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி உண்ணாவிரதம்

    By DIN  |   Published on : 18th December 2017 02:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ-ஜியோ-
    கிராப் கூட்டமைப்பினர் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 6-ஆவது ஊதியக் குழுவில் உள்ள ஊதிய முரண்பாடுகளை களைந்து, திருத்தியமைக்கப்பட்ட ஊதிய மாற்றம் செய்ய வேண்டும். ஊதியக்குழு நிலுவையை 2016-ஆம் ஆண்டு முதல் பணப் பயனாக வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.18 ஆயிரமாக மாற்றியமைக்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியமும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலிகள், ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களில் பணியாற்றி வருவோருக்கு சிறப்பு காலமுறை ஊதியமும் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ-
    கிராப் கூட்டமைப்பினர் கடலூரில் மாவட்ட ஆட்சியரின் பழைய அலுவலகம் அருகே ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    போராட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் பெ.ஆனந்ததுரை தலைமை வகித்தார். ஆதிதிராவிடர், பழங்குடி நலத் துறை ஆசிரியர் மற்றும் காப்பாளர் நலச் சங்க மாநிலத் தலைவர் கோ.பாக்கியராஜ் கோரிக்கை விளக்க உரையும், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மாநில துணைத் தலைவர் அரங்க.அனந்தகிருஷ்ணன் சிறப்புரையும் ஆற்றினர்.
    குரூப்-2 நேரடி நியமன அலுவலர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எஸ்.சிவா மற்றும் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் த.அன்பரசன், பெ.பச்சையப்பன், எம்.ஆதிநாராயணன், சி.கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai