சுடச்சுட

    

    வர்த்தகர் சங்க நிர்வாகிகளிடம் மாவட்ட எஸ்.பி. குறைகேட்பு

    By DIN  |   Published on : 18th December 2017 02:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமராட்சியில் வர்த்தகர் சங்க நிர்வாகிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.
    குமராட்சி காவல் நிலையத்தில் எஸ்பி செ.விஜயகுமார் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பின்னர், குமராட்சி வர்த்தகர் சங்கத் தலைவர் கே.ஆர்.ஜி.தமிழ்வாணன், கௌரவத் தலைவர் சக்கரவர்த்தி , பொருளாளர் அன்சாரி, நிர்வாகி கலையரசன் உள்ளிட்டோரை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.
    அப்போது, நகைக் கடை, வட்டிக் கடை, ஜவுளிக் கடை, மளிகைக் கடை உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களிலும் அவசியம் கண்காணிப்பு கேமரா பொருத்துமாறு அறிவுறுத்தினார். சிதம்பரம் ஏஎஸ்பி என்.எஸ்.நிஷா உடனிருந்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai