Enable Javscript for better performance
கடலூரில் கடல் சீற்றம்- Dinamani

சுடச்சுட

    

    கடலூரில் கடல் சீற்றம் காரணமாக பெரும்பாலான படகுகள் திங்கள்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.
    கடலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை வறண்ட வானிலை காணப்பட்டது. எனினும் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. வழக்கமாக அரை மீட்டர் முதல் ஒரு மீட்டர் உயரம் வரை எழும்பும் கடல் அலைகள், திங்கள்கிழமை இரண்டு மீட்டர் உயரம் வரை எழும்பின. இதனால், பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. ஒரு சில பைபர் படகுகள் மட்டுமே அதிகாலையில் கடலுக்குச் சென்று திரும்பின. எனினும், குறைந்த அளவிலேயே மீன்கள் பிடிபட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர். மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லையென கடலூர் வானிலை மையம் தெரிவித்துள்ளது. திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பரங்கிப்பேட்டையில் 9 மி.மீ. மழை பதிவானது. மற்ற பகுதிகளில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு: சிதம்பரம் 7, புவனகிரி 4, அண்ணாமலைநகர் 3.40, காட்டுமன்னார்கோவில் 2, சேத்தியாத்தோப்பு 1.40, லால்பேட்டை 1.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai