சுடச்சுட

  

  காட்டுமன்னார்கோவிலில் சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம் 

  By சிதம்பரம்,  |   Published on : 19th December 2017 09:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காட்டுமன்னார்கோவில் அருகே சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.
  காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள தெற்கிருப்புப் பகுதியில், முட்டம் சாலையில் நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்கு உள்ளது. இதனருகே அரசு மதுபானக் கடைகள் செயல்படுகின்றன. இந்தக் கடைகளுக்கு எதிரே தனி நபர்கள் சிலர் 10 பெட்டிக் கடைகளை வைத்து, அதில் சட்ட விரோதமாக மினி பார்களை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. 
  இதனால், மதுக் கடை அருகே உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள், அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். 
  நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்குக்குச் ரேஷன் பொருள்கள் கொண்டு செல்லும் லாரிகளுக்கும் கடைகளால் இடையூறு ஏற்பட்டது. மேலும், இந்தப் பகுதியில் மது போதையில் தகராறு செல்வோரால் அடிக்கடி சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், சாலை விபத்துகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து, வருவாய்த் துறை, காவல் துறை, மாநில நெடுஞ்சாலைத் துறை, நுகர்பொருள் வாணிபக் கழகம் என பல்வேறு துறையினரும் மாவட்ட நிர்வாகத்திடம் ஆக்கிரமிப்புக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். 
  இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர் சாலை ஆக்கிரமிப்பு பெட்டிக் கடைக்காரர்களுக்கு கடைகளை அப்புறப்படுத்த வலியுறுத்தி நோட்டீஸ் வழங்கினர். 7 தினங்களுக்குள் கடைகள், கொட்டகைகளை அப்புறப்படுத்த வேண்டும் என நோட்டீஸ்சில் கூறப்பட்டது. இதையடுத்து, 6 கடைக்காரர்கள் கடைகளை தாங்களாக அப்புறப்படுத்தினர். ஆனால், 4 கடைக்காரர்கள் காலி செய்ய மறுத்தனர். 
  இதையடுத்து, திங்கள்கிழமை நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் ஆர்.பரமேஸ்வரி தலைமையில், அந்தத் துறையின் பணியாளர்கள், பேரூராட்சிப் பணியாளர்கள் ஆகியோர் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புக் கடைகளை அப்புறப்படுத்தினர். இதையொட்டி, சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்கும் வகையில், காட்டுமன்னார்கோவில் காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். 
  இதேபோல, காட்டுமன்னார்கோவில் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூராக உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என உதவி கோட்டப் பொறியாளர் தெரிவித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai