சுடச்சுட

    

    கோயில் குளத்தில் கழிவுநீர் கலப்பு: ஆட்சியரிடம் புகார் மனு

    By  கடலூர்,  |   Published on : 19th December 2017 09:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் கோயில் குளத்தில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் மனு அளிக்கப்பட்டது.
     கடலூர் மஞ்சக்குப்பத்தில் புராதானமான வில்வநாதீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் அருகிலேயே 2 ஏக்கர் பரப்பில் குளம் அமைந்துள்ளது. இந்தக் குளம் அப்பகுதியின் நிலத்தடி நீரைப் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றி வந்த நிலையில், காலப்போக்கில் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி அரை ஏக்கர் அளவில் சுருங்கியது.
     இந்த நிலையில் கடலூர் நகரின் பல பகுதிகள் வழியாக செல்லும் கழிவுநீர் வாய்க்கால்கள் இந்த குளத்தில் கலப்பதால் குளத்து நீரும் கழிவுநீராக மாறி துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தி இடமாக மாறி சுகாதாரச் சீர்கேட்டுடன் காட்சி அளிக்கிறது. மேலும் குளத்தில் அடர்ந்து வளர்ந்துள்ள ஆகாயத் தாமரைச் செடிகள், புதர்களில் விஷப் பாம்புகள் திரிகின்றன. இதனால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு ஆபத்து நிலவுகிறது.
     இது தொடர்பாக வ.உ.சி. இளைஞர் நற்பணி மன்றத் தலைவர் கணேசன், செயலர் முருகன், பொருளாளர் தேவகுமார் ஆகியோர் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
     அதில், கடலூர் நகராட்சிக் கழிவுநீர் கோயில் குளத்தில் கலப்பதை தடுக்க வேண்டும். குளத்தை தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி பக்தர்களுக்கு பயனுள்ளவாறு உருவாக்கித்தர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai